• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நான் நிரபராதி –டிடிவி தினகரன்

Byகாயத்ரி

Apr 13, 2022

இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் நான் நிரபராதி என 10 மணி நேரம் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பின் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

மேலும் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதனையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் நேற்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறையினர் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், இந்த விவகாரத்தில் அரசியல் பின்புலம் உள்ளது. அது யார் என்பது தெரியவில்லை. சுகேஷ் வேண்டும் என்றே இந்த வழக்கில் என்னை கூறி உள்ளார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த வழக்கை பொறுத்தவரை நான் நிரபராதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.