தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் பட்டியல் எழுத்தர், பருவக்கால உதவுபவர், பருவக்கால காவலர் என 1600 க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர்.

குறிப்பாக நாகை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் முழு நேர பணியைச் செய்துள்ள போதிலும், அரசு அவர்களது வேலையை இன்றுவரை நிரந்தரமாக்கவில்லை எனக் குற்றம்சாட்டுகிறார்கள். 12 ஆண்டுகளாக பணிபுரியம் அனைத்து பருவக்கால பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 500-க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்துடன் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2022 முதல் தகுதி பட்டியலை தமிழக அரசு பெற்று வைத்துக் கொண்டு இன்று வரை பணி நிரந்தரம் செய்யாமல் உள்ளதாக குற்றம் சாட்டும் அவர்கள் குறைந்த சம்பளத்தில் பெற்றுக் கொண்டு வயது மூப்பு, நோய் வாயப்பட்டு பலர் இறந்து போயுள்ளனர் என வேதை தெரிவிக்கும் அவர்கள் உடனடியாக அனைத்து தற்காலிக பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.