தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை அமோகமாக விற்பனை செய்து வரும் நிலையில் இன்று மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடைகள் மூடினாலும் கள்ள சந்தையில் மது விற்பனை அமோகமாக நடை பெற்று வருகிறது. ஒரு பாட்டில் 140 ரூபாய்க்கு விற்பனை செய்து வரும் நிலையில் கள்ள சந்தையில் 220 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர் இவையனைத்தும் காவல் துறைக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை.
ஆனால் காவல் துறை இது பற்றி கவலை கொள்ளாமல் நடந்து வருகிறது. இதே போல் காவல் துறை கள்ளக்குறிச்சியில் கவன குறைவாக நடந்து கொண்டதால் தான் பல உயிர் இழக்க காரணமாக அமைந்தது.