• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பீஸ் பவுண்டேஷனின் சார்பில் வீட்டுமனைதிட்டம் துவக்கம்

Byகுமார்

May 6, 2024

சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் என முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் இடையபட்டி அருகில் உள்ள தச்சநேந்தல் கிராமத்தில் பீஸ் பவுண்டேஷனின் புதிய வீட்டுமனை திட்டம் துவக்க விழா நடைபெற்றது துவக்க விழாவிற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஷபா& பீஸ் குழுமம் நிறுவனர் முகமதுபாரூக் தலைமையிலும் சிறப்பு அழைப்பாளராக இசலானி ஊராட்சி மன்ற தலைவர் மீனாட்சிபூமிநாதன் கலந்து கொண்டு புதிய திட்டத்தினை துவக்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து பதிவு செய்த வாடிக்கையாளர்க்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது இந்நிறுவனத்தில் இணைந்து சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் நிறுவனத்தின் ஊழியர்கள் பொதுமக்கள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், பின்னர் செய்தியாளர் சந்திப்பில் முகமதுபாரூக் செய்தியாளரிடம் கூறியது பீஸ் பவுண்டேஷன் தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவு பெற்றது இதன் நோக்கம் வறுமையில் வாடும் வீடு இல்லாதவர்க்கு உதவி செய்ய வேண்டி முதன் முதலில் சிறிதாக தொடங்கி இன்று வளர்ந்து உள்ளது இரண்டாவதாக மேட்ரிமோனி ஆரம்பிக்கப்பட்டது மேட்ரிமோனி ஆரம்பித்தது நோக்கமானது இன்று ஏராளமான பெண்கள் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் அலைந்து கொண்டு உள்ளார்கள் இந்த நிலையை பார்த்து இனிமேல் இவ்வாறு விவாகரத்து இருக்கக்கூடிய நிலை வரக்கூடாது என்பதற்காக மேட்ரிமோனி ஆரம்பிக்கப்பட்டது இந்த மேட்ரிமோனி மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிக்காஹ் செய்து வைக்கப்பட்டுள்ளது வீட்டு மனை திட்டத்தின் மூலம் வரும் லாபத்தில் ஒரு பகுதியை எடுத்து ஏழ்மையிலும் வறுமையிலும் வாழக்கூடிய ஏழை எளிய குடும்பங்களுக்கு தீபாவளி, ரமலான், கிறிஸ்மஸ் போன்ற பண்டிகை காலங்களில் அவர்கள் வீட்டுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கணவனை இழந்த பெண்களுக்கும் பண உதவி வழங்கி வருகிறோம் என கூறினார்.