• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோர விபத்து: குஜராத் விரையும் மோடி

ByA.Tamilselvan

Oct 31, 2022

குஜராத்தில் தொங்கு பாலம் விபத்து நடந்த இடத்தை பார்வையிட பிரதமர் மோடி நாளை குஜராத் விரைகிறார்.
குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் அருகே நடந்த விழாவில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி விட்டது. தொங்குபாலம் விபத்தில் இது வரை 142 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் குஜராத் மார்பி பாலம் விபத்து நேர்ந்த இடத்திற்கு நாளை விரைகிறார் பிரதமர் மோடி. நேற்று மாலை மார்பி எனும் கயிறு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோரவிபத்தில் இதுவரை 142 போர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். 171 பேர் இதுவரை மீட்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடை மத்திய ,மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை நாளை நேரில்சென்று பார்வையிடுகிறார் மோடி.