நாகர்கோவிலில் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தடையில்லாது குடிநீர் வினியோகத்திற்கான நிதி ரூ.296.08 கோடி ஒதுக்கிய முதல்வரை நேரில் சந்தித்து நாகர்கோவில் மேயர் மகேஷ் நன்றி தெரிவித்தார்.
கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் நாகர்கோவில் மாநகராட்சி மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில் ₹296.08 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள புத்தன் அணை திட்டத்தினை கணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க இருக்கிறார், மேலும் மாநகராட்சி தொடர் கட்டுமானங்கள் விரிவுபடுத்த கட்டுமான விதிகளில் தளர்வு செய்து ஆணை பிறப்பித்த மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்களை வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் .ரெ.மகேஷ் அவர்கள் சந்தித்து நாகர்கோவில் மாநகராட்சி சார்பாக நன்றியினை தெரிவித்தார்.கழக அமைப்பு செயலாளர் .ஆர்.எஸ்.பாரதி இணை அமைப்பு செயலாளர் .அன்பகம் கலை மாண்புமிகு அமைச்சர் த.மதிவேந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.