கன்னியாகுமரியில் புனித அலங்கார உபகார மாதா திருத்தலம் வளாகத்தில் உள்ள. புனித ஜோசப் தொடக்கப் பள்ளியில், ஆற்றூர் வியன்னூர் ஒயிட் மெமோரியல் ஹேமியாபதி மருத்துவ கல்லூரி மருத்துவ மனை மற்றும், ஒயிட் மிஷன் மருத்துவ மனையும் இணைந்து நடத்திய இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் தூய அலங்கார உபகார மாதா திருத்தத்தின் அதிபர் அருட்பணி உபால்ட் தொடங்கி வைத்தார். நிகழ்வில் திருத்தல பங்குபேரவை துணைத்தலைவர் டாலன் டிவோட்டா, செயலாளர் ஸ்டார்வின், பொருளாளர் ரூபன், இணை பங்கு தந்தையர்கள் அஜின்ராஜ், ஆன்செல் ஆகியோர் பங்கு பெற்றார்கள்.

ஒயிட் ஹோமியோபதி கல்லூரியின் இயக்குநர் டாக்டர் ரூபஸ்நத்தானியேல், டாக்டர் சுசீலா ரூம்ஸ் மற்றும் மருத்துவர்கள் ஜோதிஷ்ராசு,அயனாஅஜி,சுவுமி சலாம் பங்கேற்ற இலவச மருத்துவ முகாமில் கன்னியாகுமரி பகுதியில் உள்ள பொது மக்கள் குறிப்பாக வயதானவர்கள் அதிக அளவில் பங்கேற்று. சர்க்கரை நோய்க்கான ” ரத்த” பரிசோதனை செய்துகொண்டனர்.
காலையில் தொடங்கிய இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் முன் இரவு வரை நடைபெற்றது.
