மலையாள படங்களுக்கு இந்தி ரீமேக் மார்க்கெட்டில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக பிரித்விராஜ் நடிக்கும் படங்கள் தான் இந்தியில் அதிகம் ரீமேக்காகின்றன. அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் ஜான் ஆப்ரஹாம் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரித்விராஜின் இன்னொரு வெற்றிப்படமான ட்ரைவிங் லைசென்ஸ் படமும் தற்போது இந்தியில் ரீமேக்காகிறது.செல்பி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் அக்சய் குமார் மற்றும் இம்ரான் ஹாஸ்மி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.
ராஜ் மேத்தா என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். ஒரு பிரபல ஹீரோவுக்கும் மோட்டார் வாகன அதிகாரியாக உள்ள அவரது தீவிர ரசிகருக்கும் ஏற்படும் ஈகோ மோதலை மையமாக வைத்து இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.இந்தப்படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிக்கும் தயாரிப்பாளர்களில் ஒருவராக நடிகர் பிரித்விராஜும் இணைந்துள்ளார். மேலும் மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் மற்றும் கரண் ஜோஹர் ஆகியோரும் இந்தப்படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.