அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், புங்கங்குழி ஊராட்சி, ஆதனூர் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் RIDF XXVI திட்டத்தின் கீழ் மருதை யாற்றின் குறுக்கே, ரூ.14.35 கோடி மதிப்பீட்டில் ஆதனூர் – மழவராய நல்லூர் சாலை கி.மீ 0/6-ல் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மேலும், ஆதனூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம், அரியலூர் கிளை சார்பில் அரியலூர் – சுண்டக்குடி செல்லும் பேருந்தை ஆதனூர் வரை புதிய வழித்தடத்தில் நீட்டிப்பு செய்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டஇயக்குநர்முனைவர்.ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட்,கும்பகோணம் நிர்வாக இயக்குநர்.தசரதன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் பொது மேலாளர் டி.சதீஸ்குமார், நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டப் பொறியாளர் எஸ்.சரவணன், உதவிக் கோட்டப்பொறியாளர் எஸ்.ஜெயந்தி, உதவிபொறியாளர் டி.ராஜா , மாவட்ட திமுக துணை செயலாளர்கள் சி.சந்திரசேகரன் , லதா பாலு , மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் லூயி கதிரவன்,ஒன்றிய திமுக செய லாளர்கள் மா.அன்பழகன், இரா . கென்னடி , இதர அரசு அலுவலர் கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
