கரூர் மாநகராட்சி பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்து வருகிறது. இதனால் கோடை வெயிலில் தவித்த கரூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கரூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கத்தால் கடும் வெப்பத்தில் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் இன்று மாலை திடீரென மேக மூட்டம் காணப்பட்டது. இதையடுத்து சிறிது நேரத்தில் மண்மங்கலம், வேலாயுதம்பாளையம், வாங்கல், மாயனூர், உப்பிடமங்கலம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
கரூர் மாநகர பகுதியில் சூறைக்காற்று வீசியது. சிறிது நேரத்தில் பலத்த காற்றினால் மரங்கள் பேய் போல ஆடியது. காற்றுடன் கூடிய மழையின் காரணமாக கரூர் மாநகர பகுதிகளான ஜவகர் பஜார், லைட் ஹவுஸ் கார்னர், திருமாநிலையூர், தான்தோன்றிமலை, காந்திகிராமம், வடக்கு பாளையம், தொழிற்பேட்டை பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழையினால் கரூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
கனமழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.