• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

விமானத்தில் பயணம் செய்யும்போது மாரடைப்பு

ByKalamegam Viswanathan

Feb 7, 2025

வெளிநாட்டு வேலையில் மன அழுத்தம் என சொந்த ஊருக்கு வந்தவரை உடனே துபாய் வரச்சொன்னதால் மாரடைப்பில் மரணமா? என்று விசாரணை

மதுரையில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணம் செய்த சிவகங்கை பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்பட்டது. கொச்சின் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரையில் இருந்து இன்று பகல் 1 மணியளவில் துபாய் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சிவகங்கை மாவட்டம் எட்டிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

துபாய் செல்லும் ஸ்பைஸ் கெட் விமானம் கொச்சின் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. பயணியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொச்சி போலீஸார் பிரகாஷின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்தனர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் சிவகங்கை மாவட்டம் எட்டிமங்கலம் கிராமத்தை சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் பிரகாஷ் (35) என்பது தெரியவந்தது.

மதுரையில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் பிரகாஷ் பயணம் செய்யும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கொச்சின் விமான நிலையத்திலிருந்து தனியார் மருத்துவமனை செல்லும் போது இறந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கொச்சின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விமானத்தில் பயணம் செய்த மேலூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

துபாயில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்த பிரகாஷ் மன அழுத்தமாக உள்ளதால் ஊருக்கு செல்ல வேண்டும் என நினைத்து கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவர் பணி செய்யும் நிறுவனத்தில் விரைவாக வேலைக்கு வரவேண்டும் என கூறியதால் இன்று அவசரமாக தூபாய் கிளம்பியுள்ளார்.

அப்போது அவர் மாரடைப்பில் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இறந்த பிரகாஷ்க்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடதக்கது.