கோவை அருகே வாளையாறு சோதனைச் சாவடியில், உரிய ஆவணங்களின்றி ரூ.60 லட்சம் ஹவாலா பணத்தை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் இருந்து கேரளா நோக்கி சென்ற இருசக்கர வாகனம் ஒன்று சோதனைக்காக நிறுத்தப்பட்டது. அந்த வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கட்டுக் , கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. மேலும், வாகனம் ஓட்டி வந்த ரதீஷ் (40) மற்றும் அவருடன் வந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுனில் சிவாஜி ஆகிய இருவரின் உடையிலும் பணம் மறைத்து வைத்து இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதை அடுத்து, இருவரிடம் இருந்தும் ரூ.60 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பணத்திற்கு எந்தவொரு உரிய ஆவணங்களும் இல்லாததால், போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.