அரியலூர் மாவட்டம் தா பழூர் அருகே உள்ள தென்கச்சிப்பெருமாள் நத்தம் கிராமத்தில் தென்கச்சி கோ.சுவாமிநாதன் இல்லத்தில் அறுவடைத்திருவிழா குறித்து ஆலோசனைக்கூட்டம் தென்கச்சி இள. கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் அசாவீரன்குடிக்காடு ஆசிரியர் மகா.இராவணன் கரடிக்குளம் பார்த்திபன் ஜெயங்கொண்டம் பன்னீர்செல்வம் பரஞ்சோதி கருக்கை பழனிச்சாமி சண்முகானந்தம் அக்னி சிறகுகள் அமைப்பு கோவிந்தபுத்தூர் அன்பு சத்தியராஜ் அரியலூர் தமிழ்க்களம் இளவரசன் கடலூர் மாவட்டம் முருகன்குடி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஜனவரி 25 ஞாயிறன்று காலை 9 மணி முதல் மாலை 5 வரை பாரம்பரிய விதை திருவிழா உணவு திருவிழா அறுவடைத் திருவிழா தென்கச்சி கோ.சுவாமிநாதன் வேளாண் கவிஞர் மேலக்குடிக்காடு மருதகாசி இயற்கை ஞானி நம்மாழ்வார் நினைவாக மரபை மீட்கும் விதமாக தென்கச்சிப்பெருமாள் நத்தம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அறுவடைத்திருவிழா நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்கச்சிப்பெருமாள் நத்தம் இராமநாதன் நன்றி கூறினார்.




