உழைப்பின் பெருமையை உலகிற்கு எடுத்து கூறி, தொழிலாளர் ஒற்றுமையை உணர்த்தும் உழைப்பாளர் தினத்தில் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துக்கள்.
ஜாதி மத பேதமின்றி என்றும் ஒன்றிணைந்து நிற்கும் சமூகம் தொழிலாளர்கள். தொழிலாளர்களின் நலனை நிலை நாட்டவும், அவர்களின் உரிமைகள் மற்றும் ஊதியத்தை உறுதி செய்யவும் அனுசரிக்கப்படும் இந்நாளில் தொழிலாளர் நலனுக்கு போராடிய தியாக வீரர்களை நினைவு கூர்வோம். மேலும் கடுமையாக உழைத்து நாட்டிற்கும், சமூகத்திற்கும் பங்களிக்கும் ஒவ்வொரு தொழிலாளியையும் பாராட்டுவோம்.

தொழிலாளர்களின் உழைப்பும், அர்பணிப்பும் நாட்டை நாட்டை கட்டமைக்க உதவுகிறது. இந்நாளில் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வேலை நிலைமைகளை பாதுகாக்க உறுதியெடுப்போம். குறிப்பாக வேலை இடங்களில் மகளிருக்கு பாதுகாப்பு மற்றும் சம உரிமையை உறுதி செய்வோம்.
உலகின் படைப்புகளெல்லாம் உழைப்பின் முடிவுகளே. கடின உழைப்புக்கு மாறாக உலகில் எதுவும் இல்லை. உழைப்போம் உயர்வோம். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். உழைப்பாளிகள் ஒற்றுமை ஓங்கட்டும்.
என் விஜய் வசந்த் அவரது மே தினம் வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.