• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

செல்வம் கொழிக்க பச்சை கற்பூரம் போதும்..

Byகாயத்ரி

Sep 15, 2022

வீட்டில் செல்வம் பெருக பச்சை கற்பூரம் வைத்தால் நல்லது என்பது மரபு. பச்சை கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகமாக உள்ளது. பச்சை கற்ப்பூரத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தீபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருக்கும்.

பச்சை கற்பூரமானது அதிக வாசனை நிறைந்தது. இந்த வாசனைக்கு பெரிய சக்தியே இருக்கிறது. 2 அல்லது 4 துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் நிம்மதி இருக்கும். நமக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்தி. பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள், கெட்டசக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் வீட்டை விட்டு வெளியே போகும். வீட்டில் பணத்திற்கு கஷ்டம் இல்லாமல் வீட்டில் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டுமெனில் இந்த பச்சை கற்பூரம் போதும். வீண் செலவுகள் இருக்காது. இந்த கற்பூரத்தினை பணம் இருக்கும் இடத்தில் வைக்கும்போது, அங்கு வரும் எதிர்மறையான வாசங்களையும், சக்திகளையும் இது தடுத்து நிறுத்தும். 2 பச்சை கற்பூரத் துண்டை, ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும். வீட்டில் நடைபெறக்கூடிய எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பச்சை கற்பூரத்தை இடம் பெற செய்வது நல்லது. தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான கல்லாப்பெட்டி, பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டும் வைக்கலாம். வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடிகொள்வாள். ஆதலால் பணம் புழங்கும் இடங்களில் வாசனை மிக்க பச்சை கற்பூரமானது இருந்தால் செல்வம் செழிக்கும்.