• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோவை துடியலூர் பகுதியில் பிரம்மாண்ட துபாய் சிட்டி எனும் பொருட்காட்சி துவக்கம்

BySeenu

Aug 15, 2024

கோவை துடியலூர் பகுதியி்ல் உள்ள வி.ஜி.மருத்துவமனை அருகில் உள்ள ரிலையன்ஸ் ஸ்மார்ட் எதிராக பிரம்மாண்டமான துபாய் சிட்டி எனும் பொருட்காட்சி ஆகஸ்ட் 15 ஆம் தேதி துவங்க உள்ளது.

இந்த பொருட்காட்சியில் துபாய் சிட்டியில் உள்ள உலகின் மிக உயர கட்டிடமான புர்ஜ் கலீபா,போன்ற பிரத்தியேகமாக மாதிரி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அதிசயங்களை தத்ரூபமாக உருவாக்கி, மின் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ளது.

கோவை வாழ் மக்களிடையே புதிய அனுபவத்தை தரும் வகையில் துவங்கப்பட உள்ள இந்த பொருட்காட்சி குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர்கள் துரை, பங்குதாரர் இஸ்மாயில், ஜியாவுல் ஹக் ஆகியோர் கூறுகையில்,துபாய் நாட்டை நேரில் பார்க்காதவர்கள் பொருட்காட்சிக்கு வந்தால் துபாய் நகரில் உள்ளதை நேரில் காண்பது போன்று அனுபவத்தை தரும் என கூறினர்.

மேலும் இந்த பொருட்காட்சியி்ல் குழந்தைகள், பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், பிரம்மாண்ட ராட்டினம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதாகவும், உணவு அரங்கங்கள் ஸ்னோ வேர்ல்ட் பேய் வீடு 3D கண்காட்சி அரங்குகள் மேலும் உணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் விட்டு உபயோக பொருட்கள், விற்பனைக்கான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

டி.டி.எண்டர்டெயின்மண்ட் சார்பாக நடைபெற உள்ள இந்த துபாய் சிட்டி பொருட்காட்சி கோவை வாழ் மக்களுக்கு நல்ல ஒரு பொழுது போக்கு கண்காட்சியாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.