கோவை ஃபயர் பேர்டு (FIREBIRD) மேலாண்மை கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பி.ஜி.டி.எம்.கல்வியை நிறைவு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.
கோவை செட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஃபயர் பேர்டு (FIREBIRD). மேலாண்மை கல்லூரியில் பி.ஜி.டி.எம்.கல்வியை நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
ஃபயர் பேர்டு கல்லூரியின் அறங்காவலர்கள் தலைவர் சுந்தர்ராமன் மற்றும் சுஜனா அபிராமி சுந்தரராமன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், எஸ்.வி. அழகப்பன், எஸ்.வி.ஆறுமுகம், டாக்டர் நந்தகோபால்,டாக்டர் சீனிவாசராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக மலேசிய நாட்டின் மல்டி மீடியா பல்கலை கழகத்தின் தலைவர் தலைமை செயல் அதிகாரி டாக்டர் டத்தோ மழிஹம் மஹசூத் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய முக்கிய விருந்தினர்கள் மனித வள மேலாண்மையில் PGDM, கல்வி சிறந்த திறமைகளை ஈர்ப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், தக்கவைத்துக் கொள்வதற்கும், உதவுவதாக தெரிவித்தனர்.
மேலும் ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கான வழிகளை கண்டறிவதற்கான மனித வள நிபுணத்துவ அறிவை வழங்குவதாக தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசியர்கள், துறை தலைவர்கள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.