• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தலைமை ஆசிரியை கண்டித்து அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியல்…

BySeenu

Dec 18, 2023

கோவை ராஜவீதி அருகில் தேர் நிலைத்திடல் அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் தலைமை ஆசிரியரை கண்டித்து சாலை மறியல் ஈடுபட்டனர்.

கழிவறைகள் சுத்தமாக இல்லாததால் சுகாதாரமற்ற முறையில் கழிப்பறைகள் இருப்பதாக, பள்ளி மாணவிகள் பல நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் இது குறித்து பலமுறை தலைமை ஆசிரியர்களுக்கு புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமில்லாமல் பள்ளியில் உரிய குடிநீர் வசதி இல்லை என்றும், அதேபோல குடிநீர் சுத்தமாக இல்லை என்றும் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தற்கு T.C வாங்கிக் கொண்டு சுத்தமாக இருக்கும் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்களை மிரட்டியதால் பெற்றோர்களுடன் வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்

அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது சாலை மறியலால் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பின்னர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று பள்ளி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிறகு பள்ளி மாணவர்களை கலைந்து சென்றனர்.