தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (01.03.2026) தனது 73வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனையொட்டி சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திலும், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சித் தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பிறந்த நாள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
மு.க. ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியான நீண்ட ஆயுளுடனும் வாழப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







