தமிழ்நாடு மற்றும் கர்நாடகா எல்லை பகுதியான மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு வழங்கியுள்ள விரிவான திட்ட அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் அல்லது கர்நாடக அரசு அதனை திரும்ப பெற உத்தரவிட வேண்டும் எனக்கோரி தமிழக அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரை ஏற்கனவே கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் தடுப்பணை கட்டுகிறது. இதன் காரணமாக தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கிடைக்க வேண்டிய தண்ணீரின் அளவு என்பது குறைந்துவிடும். எனவே தடுப்பணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ள இந்த நிலையில் ஒன்றிய அரசுக்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்கும் போதும் கூட கோரிக்கை வைத்தார். கர்நாடக அரசுக்கு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க கூடாது என்று கோரிக்கை வைத்தார். ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கும் தமிழக அரசால் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கர்நாடக அரசை பொறுத்தவரையில் நேற்று முன்தினம் டெல்லியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரிலே சந்தித்து மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எங்களுக்கு வழங்க வேண்டும். அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நேரிலே வைத்திருந்தார். இந்த நிலையில் தமிழக அரசை பொறுத்தவரையில் அணை கட்டினால் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கிடைக்கவேண்டிய தண்ணீர் கிடைக்காமல் போய்விடும். தமிழகத்தில் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் விவசாயம் பொய்த்துவிடும். எனவே கர்நாடக அரசால் ஏற்கனவே இதுதொடர்பான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளது. எனவே இந்த விரிவான திட்ட அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் அல்லது கர்நாடக அரசு அந்த திட்ட அறிக்கையை திரும்ப பெற உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவிற்கு தலைவலி கொடுக்கும் தமிழக அரசு
