• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

விளம்பரம் மூலம் ஆட்சியை நிறுத்திவிட முடியாது… செல்லூர் ராஜு எழுச்சியுரை..

Byகாயத்ரி

Jun 6, 2022

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் விளம்பரம் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் ஆட்சியை நிறுத்திவிடலாம் என்று திமுக அரசு நினைப்பது ஒருபோதும் நடக்காது. மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எழுச்சியுரை.

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மத்திய இரண்டாம் பகுதி கழக செயலாளர் ஞானசேகரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட கழக முக்கிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் பேசும்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போது கூட்டம் கூடுவது பெரிதல்ல எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.நீண்ட நெடிய நாள் இந்த ஆட்சி நீடிக்காது மக்களுக்கு துரோகம் செய்கிற ஆட்சி தான் இந்த ஆட்சி என்றார்.

மேலும் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு செய்வதறியாது உள்ளார்கள். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பது கூட தெரியாமல் அனைத்து நிகழ்வுகளுக்கும் சென்று விளம்பரம் தேடும் வண்ணம் தன்னை விளம்பரப்படுத்தி வருகிறார்.முதலமைச்சர் வரும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பிற்காக காவல்துறையினர் நீண்டநேரம் காத்திருக்க கூடிய அவலநிலை.மேலும் எப்படியாவது விளம்பரம் மூலமாக இந்த ஆட்சியை நிலைநிறுத்த விடலாம் என்று பார்க்கிறார். ஊடகம் மூலமாக நிலை நிறுத்தி விடலாம் என்று பார்க்கிறார்.

இது போதாது என்று சிலர் போலியாக கருத்துக்கணிப்புகளை வெளியிடுகிறார்கள்.இந்த ஆட்சியில் மக்களுடைய ஆதரவு திமுகவிற்கு கிடையாது.திமுக அதற்காக பல்வேறு கட்டங்களில் உழைத்தவர்கள் உண்மை விசுவாசிகள் இன்று தங்களை அதிமுகவில் கிடைத்து வருகின்றனர்.திமுகவிற்கு மாற்று கட்சியாக தமிழக மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு இருக்கக்கூடிய கட்சி என்றால் அது அதிமுக தான்.

2024 அல்லது 2026 ல் தேர்தல் வரும் நிச்சயம் நமக்கான ஒரு நல்ல எதிர்காலம் தரும். நிச்சயம் மீண்டும் நாம்தான் ஆளப் போகிறோம்.அரசியல் வரலாற்றில் ஒரு முறைக்கு இருமுறை திமுக வந்ததே கிடையாது அதிமுக தான் வந்திருக்கிறது. தமிழகத்தில் அதிக நாள் ஆண்ட கட்சி என்றால் அது அதிமுக தான். மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு கட்சி என்றால் அது மறைந்த எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக தான். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் வார்த்து எடுக்கப்பட்ட அதிமுகவை இன்று இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றார்கள்.மேலும் வரும் காலங்களில் அதிமுகவின் வெற்றிக்காக நாம் இணைந்து பாடுபட வேண்டும் என்றார்.