• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அரசு பேருந்துகளா? அல்லது அலங்கார ஊர்திகளா?

ByKalamegam Viswanathan

May 30, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் இயங்கும் பேருந்துகளில் குறிப்பிட்ட சில பேருந்துகள் முழுவதும் தனியார் விளம்பரம் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு தகவல் பலகை முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் செல்வதால் பொதுமக்கள் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக சோழவந்தானிலிருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு செல்லும் பேருந்தானது தனியார் விளம்பரங்கள் மூலம் பேருந்தின் முன் பகுதி தவிர அனைத்து பகுதிகளிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அலங்கார உறுதி செல்வது போல் வந்து செல்கிறது. ஏற்கனவே பேருந்துகளின் தகவல்கள் பொதுமக்களின் பார்வைக்கு தெரியாத வண்ணம் இருப்பதாகவும் வேறு பகுதிகளில் இயங்கும் பேருந்துகளை சோழவந்தான் பகுதியில் இயக்குவதால் பின்புறம் உள்ள தகவல் பலகையில் ஒரு ஊரும் முன்னாள் உள்ள தகவல் போர்டில் ஒரு ஊருமாக பயணிகளை குழப்பும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உச்சகட்டமாக பேருந்து முழுவதும் தனியார் விளம்பரங்கள் மூலம் தகவல்கள் மறைக்கப்பட்டு பொதுமக்களை உச்சகட்ட குழப்பத்திற்கு ஆளாக்கி வருகின்றனர் அரசு பேருந்துகளில் தனியார் விளம்பரங்களை தவிர்த்து பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள் பேருந்துகளை பார்த்தவுடன் செல்ல வேண்டிய ஊர்களுக்கு சொல்லும் வகையில் ஊர்களின் பெயர்கள் சரியாக தெரியும்மாறும் பேருந்தின் தடம் எண் சரியாக இருக்குமாறு அறிவிப்பு செய்ய வேண்டும் என போக்குவரத்துக் கழகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது போன்ற பேருந்துகளால் வயதானவர்கள் பேருந்து புறப்படும் போது அருகில் இருப்பவர்களிடம் கேட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதால் வயதானவர்கள் சென்று ஏற வேண்டிய நிலை ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. ஆகையால் போக்குவரத்து கழக அதிகாரிகள் அரசின் வருமானத்தை மட்டும் குறிக்கோளாக எண்ணாமல் பொதுமக்களின் நலன் மற்றும் உயிர் சார்ந்த விஷயங்களை கருத்தில் கொண்டு அரசு பேருந்துகளில் உள்ள விளம்பரங்களை உடனடியாக மறைத்து ஆரோக்கியமான தகவல்கள் மற்றும் அரசின் அறிவிப்புகளை
பேருந்தில் அச்சிட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.