கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவை நோக்கி வந்த அரசு பேருந்து, கோவை, ஒத்தகால்மண்டபம் அருகில் வரும் போது, ரேடியேட்டர் பழுதாகி பேருந்தின் இயந்திரத்தில் புகை கிளம்பியதால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

மேலும் தீயுடன் புகை வருவதை உணர்ந்த பேருந்து ஓட்டுனர். பேருந்தை ஒத்தகால்மண்டபம் பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தி, இன்ஜினின் மூடியை திறந்து கீழே இறங்கினார்.
அதுபோல் பேருந்தை நிறுத்தியதுடன் பேருந்து பயணிகளும் அவசர, அவசரமாக பேருந்தில் இருந்து கீழே இறங்கி அச்சத்தில் உறைந்தனர்.
இந்த நிலையில் பேருந்து பயணிகளில் சிலர் குறித்த நேரத்திற்க்கு வேலைக்கு செல்ல முடியாமல் தவித்ததால், ஆத்திரத்தில் அந்த பேருந்தின் இருக்கை ஓர கண்ணாடிகளை ( ஜன்னன் கண்ணாடிகள் ) உடைத்தனர்.
தமிழக அரசு போக்குவரத்து கழகம், “சுந்திரா ட்ராவல்ஸ்” போக்குவரத்து கழகமாக மாறி விட்டதாக பேசி சிரித்துக்கொண்டு கடந்து சென்ற சில பொதுமக்கள்.





