ஆன்லைனில் செக்ஸ் பாடம் எடுத்த நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியை…. அதிர்ச்சியில் தூத்துக்குடி
பள்ளி மாணவ, மாணவிகளை நல்வழிப்படுத்துவதே ஒரு ஆசிரியரின் பணி. ஆனால் அந்த ஆசிரியர் பணிக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில், நல்லாசிரியர் விருது பெற்ற பெண் தலைமை ஆசிரியை ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு ஆபாச வீடியோ அனுப்புவது ஆபாச சாட்டிங் செய்வது போன்ற வீடியோக்கள் மூலம் பள்ளி மாணவர்களை சீரழித்து அவலம் அரங்கேறி பள்ளி நிர்வாகத்தையும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் தான் தற்போது உள்ள ஹாட் டாபிக்கே.
தூத்துக்குடி மாவட்டம் சிறுநாடார் குடியிருப்பு பகுதியில் ரா.ம.வீ நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பர்வதாதேவி என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சிவசுப்பிரமணியன்நாடார் காங்கிரஸ் கட்சியில் தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். தலைமை ஆசிரியை பர்வதாதேவி ஆன்லைன் மூலமாக பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்து வருகிறார். இவர் இதுவரை அந்தப் பகுதிகளில் உள்ள சின்னஞ்சிறிய பையன்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் ஆபாச வீடியோக்களை அனுப்பி அவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறார்.


இந்த மாதிரியான செயல்களில் பர்வதாதேவி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இவர் செய்து வரும் ஆபாச லீலைகள் சமூக வலைத்தளங்களில் பரவுவதைக் கண்ட பள்ளி தாளாளர் க.ராஜன் என்பவர் அந்த வீடியோக்கள் பற்றி அந்த தலைமை ஆசிரியையிடம் கேட்ட போது, இந்த விவகாரத்தில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது என்று அவரை மிரட்டி இருக்கிறார். விஷயம் இவ்வாறிருக்க தமிழக அரசு தலைமை ஆசிரியை பர்வதாதேவிக்கு நல்லாசிரியை விருது வழங்கி இருக்கிறது வெட்கக் கேடான செயல் அல்லாமல் வேறு எப்படி சொல்வது. என்று நமக்கு புகார் மனுவாக அனுப்ப இது பற்றி விசாரிக்க நேரடியாகவே களத்தில் இறங்கினோம்.


க. ராஜன்
இச்சம்பவம் குறித்து பள்ளி தாளாளர் க.ராஜனிடம் நம்மிடம்..,
எமது பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்து வரும் பர்வதாதேவி மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. பள்ளி மாணவர்களுக்கு ஆபாச வீடியோ அனுப்புவது, ஆபாசமான சாட்டிங் செய்வது என அவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறார். இதுபற்றிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தியைக் கேள்விப்பட்ட நான், பர்வதாதேவிடம் கேட்ட போது, இந்தச் செய்தியைப் பரப்புவதில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது என்று என்னை மிரட்டுகிறார். நான் அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்து கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதியன்று தலைமை ஆசிரியை பர்வதாதேவிக்கு பதிவுத் தபால் ஒன்று அனுப்பினேன். பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் இது போன்றதொரு ஒரு ஆசிரியை பள்ளியில் பணிபுரிய எவ்வாறு நாங்கள் அனுமதிக்க முடியும். இதுபோன்ற சமுதாயச் சீரழிவை ஏற்படுத்தி வரும் தலைமை ஆசிரியை பர்வதாதேவிக்கு தமிழக அரசு நல்லாசிரியை விருது வழங்கி இருப்பது எந்த விதத்தில் நியாயம்?. என்று மூச்சுவிடாமல் தொடர்ந்து வேதனையில் பேசிய ராஜன்..,
மேலும், இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர், மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழிக்கு புகார் மனுவை அனுப்பியுள்ளோம். ஆனால் மனுவாக்கான எந்த நடவடிக்கையும் இந்த தினம் வரை எடுக்கவில்லை என்றார் வேதனை மல்க.
இக்குற்றச்சாட்டுகள் குறித்து நல்லாசிரியர் விருது பெற்ற பர்வதாதேவியிடம் பேச முயற்சித்தோம்.

பர்வதாதேவி
அவருக்கு பதிலாக பேசிய அவரது கணவர் சிவசுப்பிரமணியன் நம்மிடம்..,

சிவசுப்பிரமணியன்
பள்ளியில் தாளாளர் ராஜன் தேவையில்லாத பிரச்சனையை கிளப்பி வருகிறார். அது ஒரு இடப்பிரச்சனை அந்த இடப்பிரச்சனையில் அவருக்கு சாதகமாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக நல்லாசிரியர் விருது பெற்ற எனது விருதுபெற்ற பர்வதாதேவியை பற்றி அவதூறு கிளப்பி வருகிறார் என்று வேகமாக முடித்தார். அதன் பின்பு நாம் மாணவர்களிடம் பர்வதாதேவி ஆபாச வீடியோ (தன் உடல் பாகங்களை காட்டி) ஆபாச சாட்டிங் செய்தது உண்மையா இல்லையா? அந்த வீடியோவில் உள்ளவர் பர்வதாதேவியா? இல்லையா? என்ற கேள்வியை அழுத்தி பதிவிட்டோம். அந்த கேள்விக்கு பதில் அளித்த சிவசுப்பிரமணியம் அதற்கு என்ன சார் என் மனைவி தான் என்று சர்வ சாதாரணமாக பதிலளித்து முடித்துக்கொண்டார்.
மேலும் இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் ரெஜினி-யை தொடர்பு கொண்டு பேசினோம். பர்வதாதேவி விவகாரம் தானே அது ஒரு மானம்கெட்ட விவகாரம். ஏ.ஒ வையும், டி.ஓ வையும் விசாரிக்க சொல்லியிருக்கிறேன். எனக்கே அசிங்கமா இருக்கு சார் என்றார் வேகமாக.
.
இந்த நாடும் சமூகமும் எங்கு செல்கிறது, திமுக அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த செயல் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.

