• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நடிகை ராய் லட்சுமிக்கும் கோல்டன் விசா…

Byகாயத்ரி

Jan 12, 2022

அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும்.

ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிருத்விராஜ், துல்கர் சல்மான், திரிஷா ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு, தற்போது பிரபல நடிகை ராய் லட்சுமிக்கு கோல்டன் விசா வழங்கி உள்ளது. இவர் காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.