சிவகாசி அருகே சித்துராஜபுரத்தில் திமுகவின் தெற்கு கிழக்கு ஒன்றிய நிர்வாகிகளுக்கான ஓரணியில் தமிழ்நாடு என்ற பொது உறுப்பினர்களின் கூட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் களப்பணிகள் குறித்தும், வீடு வீடாக சென்று ஆட்சியின் சிறப்புகளை எடுத்துரைத்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, ஓரணியில் தமிழ்நாடு என்ற செயலி மூலம் எவ்வாறு கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,

திமுக ஆட்சியில் இருந்தால் தான் தமிழர்களின் வாழ்வு பாதுகாக்கப்படும், தமிழர்களின் உரிமைகள் பெறப்படும்
மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்களுக்கு ஜூலை 15ஆம் தேதி முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
தான் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருப்பதிலோ, அமைச்சராக இருப்பதிலோ தமக்கு பெருமை இல்லை எனவும் தான் ஒரு திமுகவின் அடிப்படை தொண்டராக இருப்பதே தமக்கு பெருமை என தெரிவித்தார்.
திமுகவின் ரத்த நாளங்களாகவும், வலிவும், பொலிவும் சேர்த்தவர்களாகவும் பொது உறுப்பினர்கள் உள்ளனர். திமுக தலைமையிலான தமிழக அரசாட்சியில் ஏதேனும் ஒரு திட்டத்தின் மூலமாக பயன்பெறாத குடும்பமே கிடையாது. தமிழ் புதல்வன் திட்டம், மகளிர் உரிமைத் தொகை விடியல் பயணம் என பல்வேறு நலத் திட்டங்களை அள்ளி அள்ளி கொடுத்து செயல்படுத்தி வருவதால் பயன்பெறாதவர்களே இல்லை.
திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடையே எடுத்துச் சொல்லி வருகிற 1-ம் தேதி முதல் 40 நாட்கள் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறுவதை நாம் திருவிழா போல் நம் வீட்டு விசேஷம் போல் கொண்டாட வேண்டும். தற்போதுள்ள கோடிக்கணக்கான தொண்டர்களுடன் உள்ள திமுக உறுப்பினர்களோடு மேலும்30 சதவீதத்தினரை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். வருகிற 2026-ம் ஆண்டு தேர்தல் மட்டுமல்ல எப்போதும் நம் ஆட்சியான திராவிடமாடல் ஆட்சி தான் தமிழகத்தில் தொடருமென்றார்.