• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஜெயிலுக்கு போய் கொஞ்ச நாள் தானே ஆகுது… மீரா மிதுனுக்கு நீதிமன்றம் வைத்த ஆப்பு!..

By

Aug 23, 2021

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் நடிகை மீராமிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14 ம் தேதி கைது செய்யப்பட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

. அதில் மீரா மிதுன்,தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலால், கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய போது, வாய் தவறி பட்டியலின சமுதாயத்தை பற்றி பேசியதாகவும், பிறகு தான் பேசியது தவறு என தெரிந்ததும், தான் பேசியது தவறு என குறிப்பிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.


பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர், நடிகை மீராமிதுன், பட்டியலின் மக்களை புண்படுத்தும் வகையில் வேண்டுமென்றே பேசி இருப்பதாக தெரிவித்தார். சாம் அபிஷேக், எல்லா வகையிலும் மீரா மிதுனின் செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும், மீரா மிதுனின் வீடியோக்களை படம் பிடிப்பதும் பதிவேற்றம் செய்வதும் அவர்தான் எனவும், இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் அவர் வாதிட்டார். அதேபோல புகார்தாரரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு சார்பிலும் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செல்வகுமார், புலன் விசாரணை ஆரம்ப நிலையிலேயே உள்ளதாலும், சிறையில் அடைத்து குறுகிய காலமே ஆகியுள்ளதாலும், தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என கூறி, இருவரின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.