அந்தமான் தமிழ் சங்கத்தை அங்கீகரித்து ,சிறந்த அயலக தமிழர் சங்க விருது தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில தலைவர் மு. ஞானமூர்த்தி கோரிக்கை கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலினுக்கு உலக திருக்குறள் கூட்டமைப்பு, தலைவர் மு. ஞானமூர்த்தி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,அந்தமான் தமிழர் சங்கத்தை அங்கீகரித்துச் சிறந்த அயலக தமிழர் சங்க விருது வழங்க வேண்டும்,அந்தமான் தலைநகர் விஜய புரத்தில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு அரசு கலைக் கல்லூரியில் தமிழ் வழியில் இளங்கலை படிக்கும் மாணவர்களுக்குத் தமிழக அரசு உதவித்தொகை வழங்கிட வேண்டும்,

அயலகத் தமிழர் நலவாரியத்தின் மூலம் அந்தமான் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தனி அதிகாரி நியமிக்க வேண்டும்,தமிழகத்தில் உள்ள அந்தமான் தமிழர்களின் அசையா சொத்துகள் பாதுகாக்கப்படவேண்டும்,நான் முதல்வன் திட்டத்தை அந்தமான் தமிழ் மாணவர்களுக்கும் பயனளிக்கும் திட்டமாகச் செயல்படுத்த வேண்டும்,அந்தமானில் வாழும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட மற்றும் பட்டியலின மக்களை இங்குள்ள அரசு குறிப்பேட்டில் இணைத்திடத் தமிழக அரசு நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைத் தமிழக முதல்வர் பரிவுடன் பரிசீலித்து நிறைவேற்றித் தரவேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அக்கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.