குன்னம் சட்டமன்ற தொகுதி-கோட்டைக்காடு- வெள்ளாறு மேம்பால அணுகு சாலை -பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு கோட்டைக்காடு வெள்ளாறு மேம்பால போராட்டக் குழு தலைவர் மு. ஞானமூர்த்தி கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.

அதில் , அரியலூர் மாவட்டத்தையும் கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் குன்னம் தொகுதி கோட்டைக்காடு வெள்ளாறு மேம்பால அணுகு சாலை துவங்கி 4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிக்கவில்லை. அதிகாரிகள் பலமுறை காலக்கெடு கொடுத்தும் பணி முடிக்காதது வேதனை அளிக்கிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன் அனைத்து சாலைப் பணிகள், ஏரி, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளனர்.
கோட்டைக்காடு அணுகு சாலைப் பருவமழை தொடங்குவதற்குள் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என மு. ஞானமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.







; ?>)
; ?>)
; ?>)