• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆலங்குளத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள்

திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆலங்குளம் ஒன்றியத் தலைவர் திவ்யா மணிகண்டன் அவர்களின் ஏற்பாட்டில் ரூபாய் 75 ஆயிரம் மதிப்பிலான கணினி மற்றும் இன்வெர்ட்டர் ஆகிய பொருட்களை ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அன்புதாஸ், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆலடி மானா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி, ஆலங்குளம் ஒன்றிய கழக செயலாளர் செல்லத்துரை, மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் விஜயன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் மேகநாதன், தொழிலதிபர் மாரித்துரை, பேரூர் கழக செயலாளர் நெல்சன், மாவட்ட இளைஞரணி சரவணன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஒன்றிய அவைத் தலைவர் தளபதி முருகேசன், சங்கரன்கோவில் விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அஜய் மகேஷ்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன் செல்வன், மாணவரணி துணை அமைப்பாளர் மாரியப்பன், மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் சரஸ்வதி, வழக்கறிஞர் சிவக்குமார், அலெக்ஸாண்டர், வீமராஜ் பசுபதி பாண்டியன், பொன் மோகன்ராஜ் அன்பழகன் மற்றும் வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.