• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Dec 30, 2022
  1. அசாம் அரசு ——————- நதியில் படகு சேவைகளுக்கான இந்தியாவின் முதல், இரவு வழிசெலுத்தல் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
    பிரம்மபுத்திரா
  2. ஹரியானாவின் குருகிராம் மாவட்டத்திற்கான பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ திட்டத்தின் பிராண்ட் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் யார்?
    தனிஷ்கா கோட்டியா – ரித்திகா கோட்டியா
  3. ஜம்மு ரூ காஷ்மீரின் ————————- மாவட்டத்தின் பிராண்ட் தயாரிப்பாக லாவெண்டர் நியமிக்கப்பட்டுள்ளது.
    தோடா
  4. சமீபத்தில், தமிழகத்தில் மன்னார் வளைகுடா, பாக் விரிகுடா கடல் பகுதியில் காணப்படும் கடல் பசுக்களுக்கான பாதுகாப்பகம் அமைக்க வனத் துறை எத்தனை கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது?
    5 கோடி
  5. இரவு வழிசெலுத்தல் மொபைல் செயலி, ஐஐடி மெட்ராஸின் முதன்மை விஞ்ஞானி —————– உடன் இணைந்து மாநில போக்குவரத்து துறையால் உருவாக்கப்பட்டது.
    கே.ராஜு
  6. தற்போது, ராஷ்ட்ரிய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA) திட்டத்தை ——————- ஆண்டு வரை தொடர கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
    2026
  7. சமீபத்தில், தமிழகத்தில் 188 புதிய அவசரகால வாகன சேவை தொடக்கி வைத்தவர் யார்?
    மு.க.ஸ்டாலின்
  8. சர்க்கரை நோய்க்கான சைடஸ் நிறுவனத்தின் மாத்திரைகளை விற்பனை செய்ய ——————– நாட்டின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (யுஎஸ்எஃப்டிஏ) அனுமதி வழங்கியுள்ளது.
    அமெரிக்கா
  9. மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 அரை சதங்கள் எடுத்த முதல் இந்திய கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றுள்ள வீராங்கனை யார்?
    மிதாலி ராஜ்
  10. சமீபத்தில், தொல்லியல் மற்றும் உயிரியல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் உலகிலேயே மிகப் பெரிய டைனோசரின் படிமம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
    இங்கிலாந்து