• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 24, 2022
  1. மீயொலி எதிரொலித்தல் மூலம் செயல்படும் கருவிகள் எவை?
    ரேடார், சோனார்
  2. மீன்வலைகள் செய்வதற்குப் பயன்படுவது எது?
    நைலான்
  3. ரத்தம் உறையாமல் தொடர்ந்து வெளியேறும் நோய் எது?
    ஹீமோஃபிலியா
  4. ரப்பரை வல்கனைஸ் செய்யப் பயன்படுவது எது?
    கந்தகம்
  5. முதல்நிலை உற்பத்தியாளர்கள் எனப்படுபவை எவை?
    தாவரங்கள்
  6. ரேபீஸ் நோயைத் தடுப்பதற்காக பிராணிகளுக்குப் பயன்படும் ஊசி எது?
    புரோபைலேக்டிக்
  7. மனித உடலின் எடையில் மூன்றில் இரு பங்கு எது?
    நீர்
  8. மின்னல் என்பது என்ன?
    உயர்ந்த மின் இறக்கம்
  9. மாசுக்களால் காற்று மண்டலத்தின் எந்தப் படலம் பாதிப்படைகிறது?
    ஓசோன்
  10. மிகவும் வீரியமான உப்பீனி எது?
    ப்ளோரின்