நீலாங்கரையில் கஞ்சா கடத்திய நபர் கைது செய்து, 1.2 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்கரை சோதனை சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை மடக்கி பிடித்து போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது மூவரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களது உடமைகளை சோதனை செய்த போது கஞ்சா இருந்தது தெரியவந்தது.
மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மூவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது அவர்கள் ரிச்சர்ட் கிராந்தி(30), ஆன்ந்த(30), சானு சீமோன்(22), என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இவர்கள் மீது கஞ்சா வழக்கப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





