• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவை ரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல்

BySeenu

Jan 21, 2025

அசாமில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா. கோவை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்து மூன்று பேர் கைது செய்த காவல் துறையினர் !!!

கோவை ரயில் நிலையத்துக்கு அசாம் மாநிலத்தில் இருந்து கோவை வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் கோவை ரயில்வே சிறப்பு காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்பொழுது s2 என்ற முன்பதிவு பெட்டியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த மூன்று பேரின் பைகளை சோதனை செய்தனர். அதில் அவர்களது பைகளில் 8 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதை அடுத்து காவல் துறையினர் அவர்கள் மூன்று பேரையும் ரயிலை விட்டு கீழே இறங்கி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் அசாம் மாநிலம் நாகோன் பகுதியில் சேர்ந்த அப்துல் ஹக்கீம், ரிப்புல் அலி, ஜியாபுர் ரகுமான் ஆகியோர் என்பது தெரியவந்தது. அங்கு இருந்து ரயிலில் கேரளாவுக்கு கஞ்சா கடத்திச் சென்றதும், தெரியவந்தது. இதை அடுத்து காவல் துறையினர் அவர்களை கைது செய்து அவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்கள் மூன்று பேரையும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.