• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கங்கா செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா…

BySeenu

Dec 15, 2024

கங்கா செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 300 மாணவ, மாணவிகளுக்கு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வட்டமலை பாளையம் கங்கா செவிலியர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி நிர்வாக அறங்காவலர் கனகவல்லி சண்முகநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
கல்லூரி அறங்காவலர் ரமா ராஜசேகரன் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு கங்கா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். இதில் விருந்தினராக சங்கரா மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ரமணி பங்கேற்று பேசினார்.

செவிலியர் பணி என்பது மற்ற துறைகளைப் போன்று சாதாரண பணி அல்ல நோயாளிகளை அன்போடு நேசிக்கும் பணி அர்ப்பணிக்கும் பணி இந்த பணியில் ஈடுபடுபவர்கள் ஏதோ பணி செய்கிறோம் என்ற எண்ணத்தில் இல்லாமல் அக்கறையுடன் சேவை மனப்பான்மையுடன் செயலாற்ற வேண்டும் என்று கூறினார்.

கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற 300 மாணவ, மாணவிகளுக்கு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் நாராயணசாமி பட்ட சான்றுகளை வழங்கி பேசினார்.

வேகமாக வளர்ந்து வரும் மருத்துவத்துறையில் சவால்களை தழுவி புதுமை படைத்தல் வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் இரக்கமுள்ள கவனிப்பு ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். நோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு சேவை இறைவனுக்கு செய்யும் சேவையாக கருதி மருத்துவ சேவை செய்ய வேண்டும்.

பள்ளியில் இருந்து கல்லாக வெளிவரும் மாணவ மாணவிகளை சிற்பியாக செதுக்கிய ஆசிரியர்களை போற்ற வேண்டும் உலகம் முழுவதும் என்று செவிலியர்கள் தேவை அதிகமாக உள்ளது கங்கா மருத்துவமனை போல் மிகப்பெரிய மருத்துவ கல்வி நிறுவனத்தில் இருந்து படித்து வெளியே வரும் நீங்கள் பல்வேறு சாதனைகளை புரிய தயார் படுத்தி கொள்ள வேண்டும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்தர் ராகுல்கங்கா மருத்துவமனை இயக்குனர் நிர்மலா ராஜ சபாபதி. டாக்டர் ராஜா சண்முக கிருஷ்ணன். டாக்டர் சுமா நடராஜன் . கல்லூரியின்.துணை முதல்வர் பேராசிரியர் ஜெபக்குமாரி சுதா. டாக்டர் சி சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பட்டசான்றுகளுக்கு முன்பு செவிலியர் பயிலும் மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்று சான்றிதழை பெற்றுக் கொண்டனர் இதில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.