• Wed. May 1st, 2024

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் நவம்பர் மாதம் 13ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை கந்த சஷ்டி விழா..,

ByKalamegam Viswanathan

Oct 28, 2023

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கந்த சஷ்டி விழாவும் ஒன்று.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் வரும் 13ஆம் தேதி கந்த சஷ்டி விழாவிற்கான காப்பு கட்டுதல் நிகழ்வுடன் துவங்குகிறது . பின்னர் தினமும் காலை சண்முகா அர்ச்சனை நடைபெறும் சுவாமி வீதி உலா வரும்.

நவம்பர் 17ஆம் தேதி கோவர்த்தன் அம்பிகையிடம் இருந்து சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்ய சக்தி வேலை வாங்கும் வேல் வாங்கும் விழா நிகழ்வு நடைபெறும்.

பின்னர் 18ஆம் தேதி சன்னதி தெருவில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் விழாவின் சிகர நிகழ்வாக சூரபத்மானை அளிக்கும் சூரசம்ஹார லீலை நடைபெறும்.

பின்னர் 19ஆம் தேதி கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான பாவாடை தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும் சுவாமி தங்கமயில் வாகனத்தில் வீதிகளில் வலம் வருவார்.

மிகவும் பிரசித்தி பெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் வந்து தங்குவார்கள் அவர்களுக்கான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளை அறநிலையத்துறை சார்பில் கோவில் நிர்வாக அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *