கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில் ரூ. 21 கோடி 95 லட்சம் 40 ஆயிரம் செலவில் 9 நிலை கொண்ட ராஜகோபுரம் கட்டுவதற்கு சமீபத்தில் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இக் கோபுரம் குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் முழு தொகையும் உபயமாக வழங்குகிறார்.

அதற்கான அரசாணை மற்றும் மாதிரி வரைப்படத்தினை இன்று கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சென்னை பசுமைவழிச்சாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, வழங்கி பிரபா ஜி ராமகிருஷ்ணன் வாழ்த்து பெற்றார்.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் விமானம் (கோபுரம்) அமைக்க வேண்டும் என
திருவிதாங்கூர் மன்னர், பாண்டிய மன்னர்களின் கீழ் குமரி மாவட்டம் இருந்த காலத்தில் கோபுரம் அமைக்க எடுத்த முயற்சிகள் பல முறை முயன்றும் தடைபட்டுப போனது.
குமரி மாவட்ட அறங்காவலர்கள் குழுவின் தலைவராக இருந்த பிரபா G.ராமகிருஷ்ணன் என்ற தனிமனிதன் எடுத்த அடுத்தடுத்து கேரளாவை சேர்ந்த தந்திரிகள் மூலம் செய்த பிரசன்னம் பார்த்ததில். இம்முறை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு கோபுரம் 9 நிலை அடுக்குகளுடன் கட்டுவதற்கான அனுமதி கிடைத்த நிலையில்.

அறநிலையத் துறை உயர் அதிகாரிகளின் ஆய்வுக்கு பின், கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் கோபுரம் பணிகளின் முதல் ஆய்வும் தொடங்கியுள்ளது.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் கோபுரம் கட்டுவதற்கான முழுத்தொகையான
ரூ.21கோடியே 95 லட்சத்து 40 ஆயிரம் என்ற பெரும் தொகையை தனிமனிதனாக
பிரபா G.ராமகிருஷ்ணன் கொடுக்க முன் வந்திருப்பது. குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் வியந்து பார்த்து பாராட்டப்படுகிறது.