மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் 2025-26 – ம் பள்ளி கல்வி ஆண்டின் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா புத்தகம் மற்றும் சீருடை வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு உயர்நிலை மற்றும் தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்கும் நிகழ்ச்சியில் வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு பள்ளி முதல் நாள் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா புத்தகத்தை வழங்கினார்.

உடன் பகுதி செயலாளர் திரு.சேக் மீரான் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் திரு. அருண் காந்த் வட்ட செயலாளர் திரு. சுரேஷ் கழக நிர்வாகிகள் திரு. தன் ராஜ் திரு. முகம்மது சாலி திரு. ஜூட் மகேஷ் திரு.அனிஷ் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.