.குமரி மாவட்டத்தில் அண்மை காலமாக கல்லூரி மாணவர்கள், மற்றும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். காவல்துறை கஞ்சா போன்ற போதை பொருட்களை தடைசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் ஏதோ ஒரு விதத்தில் குமரி மாவட்டத்தில் மறை முகமாக கஞ்சாவை விற்கும் சமூக விரோத கும்பல்கள்,மாவட்டத்திற்குள் புகுந்து விடுகிறது.
நாகர்கோவிலை அடுத்த இருளப்பபுரம் பகுதியில் கஞ்சாவை விற்கும் முயற்சியில் ஈடுபட முயன்ற மூன்று வாலிபர்கள், கஞ்சாவை வாங்க முயன்ற ஒருவர் என நான்கு இளைஞர்களை தனிப்படை காவலர்கள் 2_கிலோ கஞ்சாவுடன் கைது செய்து கோட்டாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கஞ்சாவை விற்க முயன்ற இளைஞர்கள் குறித்து கோட்டார் காவல்துறையிடம் கேட்ட போது..,
தனிப்படை காவலர்கள் பிடித்து வந்த 4_ங்கு இளைஞர்களின் பெயர்கள்
ஆனந்த் (29), பிரவின் குமார்(36), மூர்த்தி (34),சரவணன்(21). இவர்களிடம் இருந்த 2 கிலோ ஙஞ்சாவையும் கை பற்றிய காவல்துறை கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களிடம் இவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து, யார் மூலம் கிடைத்தது போன்ற விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள்.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கஞ்சா மற்றும் போதை பொருட்களை இளைஞர்கள் நாடாது,கல்வியிலும், எதிர்கால நலம் குறித்த எச்சரிக்கையை தினமும் ஊடகங்கள் முலம் வற்புறுத்தி வருகிறார்.