• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆரம்ப சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டு விழா..,

ByR. Vijay

Jun 30, 2025

நாகை நகரின் மருந்து கொத்தல தெரு, 27-வது வார்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் கௌதமன், நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து மற்றும் அந்தப் பகுதிக்கான வார்டு கவுன்சிலர் சித்ரா குலோத்துங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்கள்.

இந்த புதிய சுகாதார நிலையம் ரூ.1.20 கோடி மதிப்பில் இரண்டு மாடிகளில் கட்டப்பட உள்ளது. இதன் மூலமாக நகர மக்களுக்கு அருகிலேயே அடிப்படை மருத்துவ சேவைகள் கிடைக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரத்தூர் பகுதியில் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருவதால், நாகை அரசு மருத்துவமனைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், இந்த ஆரம்ப சுகாதார நிலையம் நகரின் மக்கள் தொகைக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் அமையும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.