• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நெல் சேமிப்பு கிடங்கு கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா..,

ஒரத்தநாடு அருகே தமிழ்நாடு அரசு சார்பாக 170.22 கோடியில் அது என்ன விட நெல் சேமிப்பு கிடங்கு கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் இரந்து காணொளி காட்சி வாயிலாக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் நடுவூர் கிராமத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர் பொருள் பாதுகாப்பு துறை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 170.22 கோடி மதிப்பீட்டில் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தலங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

நடுவூர் கிராமத்தில் நடைபெற்ற இவ்விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், முன்னாள் மத்திய நிதித்துற இணை அமைச்சர் பழனிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம் அண்ணாதுரை, அசோக்குமார், மாநகராட்சி மேயர் சன் ராமநாதன், துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, சதய விழா குழு தலைவர் செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கோவி.செழியன் கூறுகையில், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் நெல்லை பாதுகாப்பான முறையில் பாதுகாத்து ஆலைகளுக்கு அனுப்பக்கூடிய அரிய திட்டத்தை தமிழகத்தில் முதன்முதலாக அரசு வழங்கியுள்ளது என்றும் தமிழக மக்களையே வென்றெடுக்க முடியாத நடிகர் விஜய் பாண்டிச்சேரி மக்களை வென்றெடுப்பேன் என்பது கூரையேறி கோழி பிடிக்காதவர், வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டுவேன் என்பது போல அவர் தேர்தலில் நிற்கட்டும், முதலில் சில சில இடங்களில் வெற்றி பெறட்டும், அதன்பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்கட்டும், அதன் பிறகு பாண்டிச்சேரி போகட்டும், ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் நடிகர் விஜய் என்று கூறினார்,