அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்ட ஒன்றியம், படநிலை ஊராட்சி , காடுவெட்டி கிராமத்தில் CFSIDS திட்ட நிதியின் கீழ் ரூபாய் 35.25 லட்சம் மதிப்பீட்டில் , ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி புதிய கட்டிடம் கட்டுவதற்கான, அடிக்கல் நாட்டுதல் நிகழ்ச்சி,சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை, ஜெயங்கொண்டம் முன்னாள் ஒன்றிய சேர்மன் ,பாமக மாவட்ட செயலாளர் என் ரவிசங்கர் ,மாவீரன் மஞ்சள் படை நிறுவனர் குரு. கனலரசன் ஆகியோர் தலைமை வகித்து துவக்கி வைத்தனர்.இந்நிகழ்வில்ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் காயத்ரி, மற்றும் கிராம பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
