அரியலூர் எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு, எல் ஐ சி முகவர்கள் சங்கம்,லிகாய் சங்கத்தின் 22 வது அமைப்பு தின விழா,சங்கத்தின் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.

லிகாய் சங்கத்தின் 22வது அமைப்பு தின விழாவை முன்னிட்டு,விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிஐடியூமாவட்ட துணை தலைவர் ஆர் .சிற்றம்பலம் கலந்து கொண்டு சங்கக் கொடியினை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு அரியலூர் எல் ஐ சி கிளை லிகாய் சங்க தலைவர் என் நீலமேகம், கிளை துணைத் தலைவர் கே .அருள்உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.

அரியலூர் எல்ஐசி கிளை லிகாய் சங்க கவுரவ தலைவர் எம் பாலசுப்பிரம ணியன் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.தொடர்ந்து, சங்கத்தின் 22வது அமைப்பு தின விழாவை முன்னிட்டு,அரியலூர் எல்ஐசி கிளை மேலாளர் எம் ஜெயகண்ணன்,துணை மேலாளர் சி சக்திவேல்,ஊழியர் சங்க செயலாளர் ஏ ஆபிரகாம் ஜோஸ்வா,வளர்ச்சி அதிகாரிகள் சங்க நிர்வாகி என் நந்தகுமார்,லிகாய் சங்க அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் கே கிருஷ்ணன்,மாநில குழு உறுப்பினர் பி ஆறுமுகம்,கோட்ட துணை தலைவர் டி. மாலதி, தஞ்சை கோட்டை செயற்குழு உறுப்பினர்கள் வி அருமை கண்ணு,வி முருகானந்தம்,கோட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் டி ராஜா,எஸ் முருகேசன், சங்க பொருளாளர் எஸ் செல்வராஜ் உள்ளிட்டோர் ,வாழ்த்துரைவழங்கினர்.தொடர்ந்து ,பாலிசிதாரர்களுக்கு போனஸ்சை உயர்த்தி வழங்கிட வேண்டும்,

முகவாண்மை இருக்கும் வரைகுழு காப்பீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கமிஷன் குறைப்பு நடவடிக்கையை கைவிட்டு மீண்டும் மீண்டும் பழைய கமிஷனை முகவர்களுக்கு வழங்கிட வேண்டும்,காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய முதலீட்டை மத்திய அரசு அனுமதிக்கும் முடிவை கைவிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லிகாய் சங்க நிர்வாகிகள் சார்பில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.




