• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நலத்திட்ட உதவி வழங்கிய முன்னாள் மாணவர்கள்..,

ByKalamegam Viswanathan

Jun 16, 2025

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரத்தில் உள்ள அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி பள்ளியில் கடந்த 1997 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து சந்தித்து வந்தனர். இந்த நிலையில் தாங்கள் படித்த பள்ளிக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

அதேபோல் இந்த ஆண்டும் தாங்கள் படித்த பள்ளியில் ஒன்றிணைந்த சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்குத் தேவையான மின்விசிறி பெஞ்ச் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கினர். மேலும் தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களை வரவழைத்து சால்வை அணிவித்து அவர்களிடம் ஆசி பெற்றனர்.

தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளி வாயில் முன்பு பெயர் பலகை ஒன்றையும் திறந்தனர் சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் ஒன்றாக சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சி அங்கு நெகிழ்ச்சியை உருவாக்கியது.

முன்னாள் மாணவர்களின் இந்த சந்திப்பு நிகழ்ச்சியை கருப்பட்டி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் முன்னாள் மாணவர் லெட்சர்கான் ஒருங்கிணைத்தார். பள்ளி சார்பில் தலைமை ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.