விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள முகவூரில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, முகவூர் நண்பர்கள் குழு சார்பில், பதினாறாம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு தினங்கள் பூக்குழி விளையாட்டு திடலில் உள்ள செயற்கை ஆடுகளத்தில் வைத்து நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாபளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு கபடி போட்டியினை தொடங்கி வைக்க, வருகை தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதனை ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தருவதாக கபடி குழுவினருக்கு உறுதி அளித்தார் . மேலும் கபடி போட்டியை சிறப்பாக நடத்த ரூபாய் 50,000 நிதி உதவி அளித்தார். செட்டியார்பட்டி பேரூர் கழக செயலாளர் அங்கு துறை பாண்டியன், ராஜபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் குருசாமி மற்றும் நண்பர்கள் கபடி குழுவினர் உடன் இருந்தனர்.
