விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம், சக்தி மாரியம்மன்கோவில் கட்டிட திருப்பணிக்கு முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி ரூபாய் ஐம்பதாயிரம் நிதி உதவி வழங்கினார்.
சிவகாசி வட்டம் சில்வைய நாயக்கன்பட்டி கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கட்டிட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சக்தி மாரியம்மன் கோவில் திருப்பணிக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என திருப்பணி குழு கமிட்டியினர் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திரபாலாஜியிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்று கோவில் திருப்பணிக்கு ரூபாய் ஐம்பதாயிரம் நிதி உதவி அளித்தார். திருப்பணியை சிறப்பாக செய்யுமாறு கேட்டுக் கொண்டார். நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு திருப்பணி குழு கமிட்டியினர் நன்றி தெரிவித்தனர்.
