• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பள்ளி, கல்லூரி மற்றும் கிராமங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் போதை பொருட்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கோவையில் பேட்டி…

BySeenu

Jan 28, 2024

போதை பொருள் தடுப்பு குறித்தும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் அனைத்துக்கும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மினி மாரத்தான் ஓட்ட பந்தயம்.

மினி மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முன்னாள் தமிழக காவல்துறை தலைமை இய‌க்குன‌ர் சைலேந்திரபாபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கோவை கணபதி அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் சி.எம்.எஸ் வித்யா மந்திர் பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் இன்று தமிழகத்தில் போதை பொருட்கள் தடுப்பு குறித்தும், பெண்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இரண்டாவது ஆண்டு சி எம்.எஸ்.மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

இரண்டு கிலோமீட்டர், ஐந்து கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த ஓட்ட பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு கொடியசைத்து துவக்கி வைத்து அவரும் கலந்து கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சைலேந்திரபாபு கூறியதாவது..,

தமிழகத்தில் கஞ்சா வேட்டை என்ற ஆபரேஷன் திட்டத்தை துவங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்தோம்.

இதில் சுமார் 2000″த்திற்கும் மேற்பட்டோர்களின் சொத்துக்கள் முடக்க பட்டது. இதனால் குற்றங்கள் குறைந்தது. இதே போன்று குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகின்றது.

மேலும் இதற்காக கோவையில் இது மாதிரியான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட பந்தயம் நடத்துவது அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் எனவும்,

மேலும், இன்றைய குழந்தைகள் ஓட்டுவதற்கே தயாராக இல்லை – இது அவர்களின் உடல் வளர்ச்சி மற்றும் மனவளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளுக்கு விதையாக இருந்து வருகின்றது.

குழந்தைகள் மினிமம் 5 கிலோமீட்டர் தூரம் ஒட வேண்டும், அதற்கு இது மாதிரியான ஓட்ட போட்டிகளை அனைத்து பள்ளிகளும் நடத்த முன் வர வேண்டும் என்று இவ்வாறு தெரிவித்தார்.