தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நலமுடன் இருந்த போதும் சரி அவர் மறைவுற்ற பிறகும் அதிமுகவினர் அவரது நினைவு நாளை மட்டும் அல்ல பிறந்த நாளையும் ஒவ்வொரு பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவை இன்று தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கொண்டாடினர்.

புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் திருவரங்குளம் தெற்கு ஒன்றியச் செயலாளர் T.பாண்டியன் தலைமையில் ஆலங்குடி தொகுதி கொத்தமங்கலம் ஊராட்சி வாடிமாநகர் கடைத்தெருவில் நடைபெற்ற விழாவில் கழகத்தினுடைய மூத்த நிர்வாகிகள் இந்நாள் முன்னாள் பொறுப்பாளர்கள் கழகத்தினுடைய உடன்பிறப்புகள் பெரியவர்கள் தாய்மார்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி வணங்கி மரியாதை செலுத்தினர். நிகழ்வின்போது அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வரும் தேர்தலில் இவர் தான் போட்டியிடப் போகிறார் என்ற கணிப்பு இருக்கும் நபர்களின் ஒருவரான தொழிலதிபர் பழனிவேல் ஆயிரம் பேருக்கு மேல் மதிய உணவு வழங்கும் விழாவாக முட்டையுடன் கூடிய சிக்கன் பிரியாணி சமைத்து வழங்கினார். அதிமுகவில் இளைஞர் இளம்பெண் பாசறை மற்றும் முக்கிய நிர்வாகிகளும் இந்திராணி தலைமையிலான மகளிர் அணியினரும் பிரியாணியை வழங்கிச் சிறப்பித்தனர்.






