• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குமரி தேவாலயங்களில் பாதம் கழுவிய நிகழ்ச்சி

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தேவாலயங்களில்.புனித வெள்ளிக்கிழமைக்கு முந்தின தினத்தை பெரிய வியாழன் என்ற அடை மொழியுடன் உச்சரிப்பது தொன்று தொட்டு இன்றுவரை தொடர்கிறது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் தினத்திற்கு முந்திய நாள் இரவு உணவிற்கு முன். இயேசு நாதர் அவரது 12_சீடர்களின் கால் பாதங்களை அவரே கழுவி துடைத்து விடுவார். குமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார், குழித்துறை மறை மாவட்டங்களின் கீழ் உள்ள 250_க்கும் அதிகமான தேவாலயங்களில் இத்தகைய திரு சடங்கு நடைபெற்றது.
கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை மற்றும் பசலிக்காவான”கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில் நடைபெற்ற திருசடங்கில்.கோட்டார் மறை மாவட்டத்தின் ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்ற திருப்பலியின் போது.சிறுவர், சிறுமிகள் மற்றும் அருட் சகோதரிகள் உட்பட 12பேரின் பாதங்களில் தண்ணீர் ஊற்றி அவர்களது பாதங்களை தொட்டு கழுவினார்.கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை. புனித வெள்ளிகிழமை ஆன இன்று(ஏப்ரல்7)ம் நாளில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க திருச்சபையின் தேவாலயங்களின் முற்றத்தில்.”சிலுவைபாடு”என்னும் இயேசுவின் கல்வாரி பயணத்தில் பாரமான சிலுவையை அன்று சுமுந்து சென்ற போது இறை இயேசு அனுபவித்த துன்பங்களை பிரார்த்தனை வடிவில் நினைவு கூறும் சிலுவைபாதை என்னும் பிரார்த்தனை இன்று பிற்பகல் 3மணிக்கு நடை பெற உள்ளது.