தேமுதிக நிறுவன தலைவர் ஆன பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்தின் 73 வது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் கட்சியினர்களால் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி 26 வது வட்டக் கழக செயலாளர் சிட்டி கே.ராமசந்திரன் சிட்டி ஆர் அழகுமணி ஆகியோர் ஏற்பாட்டில் விஜயகாந்தின் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர மாவட்ட தேமுதிக செயலாளர் சிங்கை கே.சந்துரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் பீளமேடு பகுதி கழக செயலாளர் பன்னீர்செல்வம் கோவை மாநகர மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்தராஜ் மாநகர மாவட்ட அவை தலைவர் பொன்ராஜ் பீளமேடு பகுதியை அவை தலைவர் சக்திவேல் பொருளாளர் தேவா மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதுமட்டுமின்றி இந்த நிகழ்வில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பாலாஜி உத்தம ராமசாமி அதிமுக மாவட்ட துணை செயலாளர் உலகநாதன் திமுக மாவட்ட பிரதிநிதிகள் துரைசாமி பீளமேடு பகுதி செயலாளர் உலகநாதன், மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் ஊர்பொதுமக்க்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.